×

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மூதாதையர்களின் பிறப்பு, இறப்பு சான்றிதழை வெளியிட வேண்டும்

திருச்சி, ஜன.21: பொருளாதார கணக்கெடுப்பில் மூதாதையர்களின் ஆவணங்கள் கேட்கப்படுவதால் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களுடைய பெற்றோர், தாத்தா பாட்டிகளின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சம்சுதீன், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்.ஆர்.சி, என்பிஆர், சி.ஏ.ஏ சம்பந்தப்பட்டவர்களுடைய பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழும் அவர்களுடைய மூதாதையர்களுடைய பிறப்புச் சான்றிதழில் கோரப்படுகின்றன.

மூதாதையர் எவ்வித ஆவணங்களையும் எங்களிடம் கொடுக்காமல் மேலே சென்று விட்டனர். ஆகையால் அந்த ஆவணங்களை கேட்டு நாங்கள் மேலே செல்ல முடியாது. குடியுரிமை சட்டத்தை திருத்திய பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி அவர்களும், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய மூதாதையர்களின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் என நம்புகிறோம். ஆகையால் அதை எந்த வகையில் பெற்றோர்கள் என்பதை நாட்டு மக்களாகிய எங்களுக்கு தெரியப்படுத்தினால் நாங்களும் அந்த ஆவணங்களை பெற ஏதுவாக இருக்கும். எனவே அந்த ஆவணங்களை வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Home Minister ,birth ,ancestors ,
× RELATED வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா