×

தாராநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரிக்கை மனு

திருச்சி, ஜன.21: காந்திமார்க்கெட் வாழைக்காய் மண்டி, தாராநல்லூர் பகுதிகளில் தொழிலாளர்கள், இளைஞர்களிடையே கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் பாமக நிர்வாகி மனு கொடுத்தார். திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி, தாராநல்லூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கஞ்சா மற்றும் புகையிலையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் கஞ்சா அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. பெண்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கஞ்சா கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் காப்பாற்றும்படி காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திலிப் குமார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
முசிறி பகுதியில் மது விற்ற இருவர் கைது

முசிறி, ஜன.21: முசிறி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி சப்-இன்ஸ்பெக்டர் ரவி போலீசாருடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திண்ணகோணம் பிள்ளையார்கோயில் பகுதியில் வேல்முருகன் (30) என்பவரும், திருத்தியமலை ஏரி கரையில் மோகன்ராஜ் (44) என்பவரும் டாஸ்மாக் மது பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து வேல்முருகன், மோகன்ராஜ் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : cannabis sale ,
× RELATED புதுச்சேரியில் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை.: வாலிபர் கைது