×

முதல் நிலைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

சேலம், ஜன.21: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள தொகுதி-1 முதல்நிலைத் தேர்வு பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள தொகுதி-1 முதல்நிலைத் தேர்வு பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 23ம் தேதி நடக்கிறது.

அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களது புகைப்படம், விண்ணப்பித்த விவரங்களுடன் (ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு) சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கொள்ளலாம். இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Level Examination ,
× RELATED சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வில்...