×

புதுக்கோட்டையில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே காஸ் சிலிண்டர் இணைப்பு குறித்து தங்களது கருத்துக்களை, குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு உருளை இணைப்பு பெற்று உள்ள நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாகவோ அல்லது மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு நேரிலும் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags : Gaz Consumer ,grievance meeting ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...