×

அரூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

அரூர், ஜன.21: அரூர் பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள்  அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரூர் பேருந்து  நிலையத்தில் நடைபெற்ற முகாமினை சம்பத்குமார் எம்எல்ஏ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சார் ஆட்சிர் பிரதாப், வக்கீல் பசுபதி, பாபு, வேலு, பாஷா,  சிவன், சேகரன், மருத்துவர் தொல்காப்பியன், அருள் உள்பட பலர் கலந்து  கொண்டனர். இதேபோல், கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுசுயா  காமராஜ் சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் சிலம்பரசன்,  அருண்பிரசாத் கலந்து கொண்டனர்.

Tags : Polio drip camp ,Aroor ,
× RELATED அரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி...