×

நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையால் சாய்ந்ததால் கடும் பாதிப்பு

நீடாமங்கலம்,ஜன.21: நீடாமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்தாலும்,மேட்டூர் அணையிலிருந்து காலத்தில் தண்ணீர் திறக்காததாலும் விவசாயிகள் சரியான நேரத்தில் சாகுபடி பணியை தொடங்கமுடியாமல் கவலையில் இருந்தனர்.இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்தாலும் மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது. ஆனாலும் விவசாயத்திற்கு தாமதமாக தட்டுப்பாடின்றி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு சம்பா மற்றும் தாளடிபணியை விவசாயிகள் தொடங்கினர். விவசாயிகள் நெற்பயிருக்கு சரியான உரங்களை இட்டு பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில் கடந்த மாதம் பெய்த பருவமழையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சில இடங்களில் இளம் பயிர்கள் அழுகியது. சில இடங்களில் அழுகிய நெல்பயிரில் உள்ள தண்ணீரை வடியவைத்து வயல் காய்ந்த உடன் உரங்கள் அடித்ததால் பயிர்கள் ஓரளவு நன்றாக விளைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காற்றுடன் பெய்த மழையால் சித்தமல்லி,நகர், அனுமந்தபுரம்,பழங்களத்தூர்,முல்லைவாசல்,பெரம்பூர்,ரிஷியூர்,காரிச்சாங்குடி, கானூர் அன்னவாசல், ராஜப்பையன்சாவடி, மடப்புரம்,மேலாளவந்தசேரி,அரிச்சபுரம் சித்தாம்பூர் வெள்ளக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் தரையோடு தரையாக படிந்து கிடப்பதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். கடந்த மாதம் பெய்த மழையில் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அதனை பாது காத்து அறுவடை செய்யும் நேரத்திலும் பெய்தமழையால் அறுவடைகூட செய்யமுடியாத அளவிற்கு நெல்மணிகள் தரையில் படித்துள்ளது இதனால் மிகப்பெரிய மகசூல் இழப்பு ஏற்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.

Tags : Harvesting ,area ,Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி