×

கமலாபுரம் ஊராட்சியில் சூரியமின்சக்தி மூலம் இயங்கும் நீர்தேக்கத்தொட்டி

திருவாரூர், ஜன.21: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கமலாபுரம் ஊராட்சியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் நீர்த்தேக்க தொட்டியினை நேற்று கூடுதல் கலெக்டரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் இருந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சூரிய மின் சக்தியை கொண்டு நிறைவேற்றுவதற்கு 100 எண்ணிக்கையிலான சோலார் சாதனங்களை அமைத்திட மாவட்டத்திற்கு காரைக்காலில் இயங்கிவரும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ரூ 3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ரூ 60 லட்சம் மதிப்பில் 20 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இந்த சோலார் சாதனங்களை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு பொது மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் இந்த சோலார் அமைப்பினை முழுமையாக பயன்படுத்தி மின் தேவையை குறைத்து பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கிட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூடுதல் கலெக்டர் ஆய்வு
கத்தரி    ரூ.36
தக்காளி    18
வெண்டை    26
அவரை    34,30
கொத்தவரை    30
முருங்கை    120
முள்ளங்கி    26
புடலை    26
பாகல்    30
பீர்க்கன்    30
வாழைக்காய்    40
வாழை பூ,
வாழை தண்டு    15,5
கருணை    40
சேனை    36
பரங்கி    18
பூசணி    18
சுரை    18
மாங்காய்    140
தேங்காய்    20,18,16
எலுமிச்சை    50
நார்த்தை    20
கிடாரை    70
சின்ன வெங்காயம்    130
பீன்ஸ்    50
கேரட்    66
உருளை    38
..........................................
பெட்ரோல் லிட்டர்: ரூ.78.93
டீசல் லிட்டர்: ரூ.73.13
மன்னார்குடி
உழவர்சந்தை
1 கிராம் .... ரூ.3,824
1 பவுன் .... ரூ.30,592
காவிரி- 2,014 கன அடி
வெண்ணாறு- 500 கன அடி
கல்லணை கால்வாய்- 1,011 கன அடி
கொள்ளிடம்- 1,903 கன அடி

Tags : Solar Power Station ,Kamalapuram Panchayat ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு