×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் மழையால் சாய்ந்தது

முத்துப்பேட்டை, ஜன.21: முத்துப்பேட்டை ஒன்றியத் தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் மழையால் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 14ஆயிரம் எக்டேர்சாகுபடி நிலம் உள்ளது. இதில் அனைத்து பகுதியிலும் சம்பா தாளடி சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. இதில் நெற்பயிர்கள் 80நாட்களைத்தாண்டி செழுமை கண்டு இருந்த நேரத்தில் அப்பொழுது பெய்த கனமழையால் நீர்சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பரவலாக பயிர்வளர்ந்து செழிப்புடன் காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் இப்பகுதி விவசாயிகள் அறுவடை பணியை துவங்கினர். இதில் வயலின் முகப்பு பணியில் துவங்கிய அறுவடை பணிகள் அறுவடை இயந்திரம் பற்றாக்குறையால் சன்னமாக நடந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்கள் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து வயலில் கிடக்கிறது. இதனால் நெல் மணிகள் உதிர;ந்து முளைத்துவிடும் நிலையில் உள்ளது.சில வயலில் பெய்த மழைநீர்தற்பொழுது வடிந்து இருந்தாலும் பல வயல்களில் இன்னும் தண்ணீர்வடியாமல் நீர்தேங்கி நிற்கிறது இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இதில் அதிகளவில் உதயமார்தாண்டபுரம், மாங்குடி போன்ற பல பகுதியில் சாய்ந்த பயிர்கள் உரு சேறுவதில் சிரமம் என்ற நிலைதான் உள்ளது.

அதனால் மழையால் சாய்ந்த சாகுபடி வயலை துரிதமாக மாவட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாங்குடி விவசாயி கண்ணன் கூறுகையில், நம்பிக்கையுடன் பல்வேறு சோதனைகளை தாண்டி சம்பா பயிரை இந்தாண்டு நல்ல நிலைக்கு கொண்டு வந்தோம் ஆனால் இயற்கை எங்களை விடவில்லை முத்துப்பேட்டை பகுதியில் பாதிப்படைந்த விவசாயிகளின் நெல்களை அரசு முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டும் என்றார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சாகுபடி வயலை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க துச்செயலாளர்பிஆர்.பாண்டியன்கூறுகையில்,காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர்மாவட்டங்களில் சுமார்12 லட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா பயிர்கள் பொங்கல் பண்டிகையோடு அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக பருவம் மாறி பெய்த கடும் மழையால் சுமார்5 லட்சம் ஏக்கர்நிலபரப்பில் கதிர்கள் அடியோடு சாய்ந்தது. இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பாதிப்பு அடைந்த பகுதியை பார்வையிட்டேன் வேதனையாக உள்ளது. பல இடங்களில் சாய்ந்த பயிர்நீரால் சூழப்பட்டும் உள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து உள்ளனர்.இவர்களுக்கு அரசு போதிய இழப்பு வழங்க முன்வரவேண்டும் அறுவடை இயந்திரம் பற்றாகுறையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தேவைக்கேற்ப அறுவடை இயந்திரங்களை வரவழைத்தும் இப்பகுதி விவசாயிகளிடம் நெல்களை தடையின்றி கொள்முதல் செய்திட வேண்டுகிறேன் என்றார்.

Tags : Muttupetta Union ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்