×

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் நூதன போராட்டம்

பெரம்பலூர்,ஜன.21:கல்பாடியில் இயங்கிவரும் அரசு டாஸ் மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, பெரம்ப லூர் கலெக்டர் அலுவலகத்தை கிராமப் பொதுமக்கள் முற்றுகையிட்டு நூத னமாகக் கும்பிடு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை சிறுவர் பூங்கா முன்பு முற்றுகையிட்டு, தயவு செய்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்று ங்கள் எனக்கோரி கும்பிடு போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங் கிற்குச் சென்று கலெக்டர் சாந்தாவிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : நாங்கள் கல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் ஊருக்கு நடுவே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது.பால்பண்ணை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற் றின் அருகேதான் இந்த அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. மேலும் மருத்துவமனை, நூலகம், நியாய விலைக் கடை போன்ற இடங்களுக்கு இவ் வழியே செல்வதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அதைவிடப் பேரச்சமாக, எங்கள் ஊரில் உள்ள பள்ளி மாணவர்க ளும் இந்த மதுபானத்திற்கு அடிமையாக மாறி வருகின்றனர்.

கல்பாடி கிராமத்தில் இருக்கும் அனைவரும் வறுமை கோட் டிற்குக் கீழ் உள்ளவர்கள். தினக்கூலி வேலைசெய்து தான் அன்றாட வாழ்க்கை நடத்து கின்றனர். எங்கள் ஊர் பெண்களின் கணவர், அப்பா, அண்ணன், தம்பி உள்ளிட்ட அனை வரும் தினக்கூலி சென்று சம்பா தித்துக் கொண்டு வரும் வருமானம் அனைத்தை யும் மதுபான கடைக்குச் சென்று குடிப்பதற்கே செல வுசெய்து வருகின்றனர். குடித்துவிட்டு பலரும் தெருக்களில் சுருண்டு கிடப்பதால் பெண்களுக் குப் போதுமான பாதுகா ப்பு இல்லாமல் உள்ளது. அதோடு பலரும் குடித்து விட்டு வீட்டுக்கு செல்வ தால் தினமும் பல வீடுக ளில் குடும்பப் பிரச்சனை அதிகமாகி வருகிறது. என வே பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தயவுசெய்து பரிசீலனை செய்து, கல் பாடி கிராமத்தில் உள்ள பெண்களின், குழந்தைக ளின் நலன் கருதி, இங்கு இயங்கி வரும் அரசு மது பானக் கடையை அகற்று மாறு பணிவுடன் கேட்டு க்கொள்கிறோம் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். அப்போது கல்பாடியில் அரசு மதுபான கடை இய ங்கி வருவது குறித்து முழு மையாக விசாரணை நடத் தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சாந் தா கூறிய பதிலை தொடர் ந்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

Tags : office ,collector ,task force ,removal ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...