×

பருத்தியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பருத்தியைத் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில், பருத்தியின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல வகையான பூச்சிகள் தாக்கி சேதத்தை உண்டு பண்ணுகின்றன. உலக அளவில் 1326 வகையான பூச்சியின ங்கள் பருத்தியைத் தாக்கி சுமார் 60 சதவீத மகசூலைக் குறைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் மட்டும் 162 பூச்சி இனங்கள் பருத்தியைத் தாக்கி 10 முதல் 50 சதவீதம் வரை சேதத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது பிடி பருத்தியானது அதிக பரப்பளவில் சாகுபடி செய்ப்படுகிறது. இவற்றில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கி மிகுந்த மகசூல் இழப்பிற்கு காரணமாக அமையும். மேலும் இவற்றில் காயப்புழுக்கள் தாக்கா வண்ணம் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகள்: சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி,இலைப்பேன், தத்துப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ ஆகியவை பருத்தியைத் தாக்கி சேதம் விளைவிக்கும் பூச்சிகளுள் மிக முக்கியமானவையாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி பருத்தி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேத த்தை ஏற்படுத்துகின்றன.

அசுவிணி: அசுவிணியானது இலைகளின் அடிப்பாகத்தில் மஞ்சள் நிறத்தில் கூட்டம் கூட்டமாக காணப்படும். இலையின் சாற்றை உறிஞ்சுவதால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். பருத்தி பூ, பிஞ்சுகள் பிடிக்கும் காலங்களில் இவை தோன்றினால் அவை உதிர்ந்து விடும். மேலும் இப்பூச்சிகள் தேன் போன்ற ஹனி டியூ திரவத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றுகின்றன. இத்திரவத்தின் மீது கருமையான பூசண வளர்ச்சி ஏற்பட்டு ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சி தடைபடுகின்றது. அசுவிணிப் பூச்சி எல்லாக் காலங்களிலும் காணப்பட்டாலும், சிந்தெடிக் பைரித்ராய்டு மருந்து தெளித்த பருத்தி வயல்களில் இதன் எண்ணிக்கை மற்றும் சேதம் அதிகமாகக் காணப்படும்.

இலைப்பேன்: இலைப்பேன் பருத்தியின் இளம் பருவத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் தாக்குதலால் நுண்ணிய வெண் புள்ளிகள் தோன்றும். மேலும் இலைகள் மேல் நோக்கி வளைந்து மேல் நோக்கிய கிண்ணம் போன்ற சேதத்தை ஏற்படுத்தும். சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொர மொரப்பாகவும், வெளிர் பச்சை நிறமாகவும் மாறுகின்றன. இப்பூச்சிகள் குறிப்பாக வறட்சி அதிகம் உள்ள காலங்களில் அதிகமாகத் தோன்றி சேதத்தை உண்டாக்குகின்றன.

வெள்ளை ஈ; வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பாகத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் வெளிர் பச்சை நிறமும், பின்பு பழுப்பு நிறமடைந்து காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. மேலும் தேன்பாகு போன்ற கழிவுப்பொருட்களை இப்பூச்சிகள் வெளியேற்று வதால் இவை கருமை நிற பூசணம் வளர ஏதுவாகின்றது. இவ்வகை பூசண வளர்ச்சியால், இலைகளில் ஒளிச்சேர்க்கை தடைபடுகின்றது. தேன் போன்ற திரவம் படிந்த பருத்தி நிறமாற்றமடைந்து பஞ்சின் தரம் குறைந்துவிடும். அதிக தழைச்சத்து இடுதல், குறுகிய இடைவெளியில் சாகுபடி செய்தல் போன்றவை இதன் தாக்குதல் தோன்ற காரணமாக அமைகிறது. கோடை காலப் பருத்தியில் இதன் சேதம் அதிகமாகக் காணப்படும்.

நாவாய்ப்பூச்சி:
சிவப்பு நாவாய்ப்பூச்சிகள் பருத்தி காய் வெடித்தவுடன் சாற்றை உறிஞ்சுவதால் பஞ்சின் நிறம் மாறிவிடுகிறது. மேலும் பூச்சிகள் தாக்கிய காய்களை பூஞ்சாணங்களும் தாக்கி பஞ்சின் தரத்தைக் கெடுக்கின்றன.

மாவுப்பூச்சி;
பஞ்சு போல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிக் கூட்டங்கள் இலைகள், கிளைகள், இளம் தண்டுகள், பூ மொட்டுகள் மற்றும் இளம் காய்களில் பரவிக் காணப்படும். இலை மற்றும் தண்டின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடும். தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சியின்றி குட்டையாகக் காணப்படும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தை உண்பதற்கு எறும்புகள் கவரப்பட்டு செடியின் மேல் ஊர்ந்து செல்வதைக் காணலாம். மேலும் எறும் புகள் மாவுப்பூச்சிகள் ஓர் இடத்திலிருந்து மற்றெhரு பரவுவதற்கு பயன்படு வதோடு ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளிட மிருந்தும் மாவுப் பூச்சிகளைப் பாதுகாக்கவும் உதவுகின்றது. மேலும், கேப்னோடியம் என்ற பூஞ்சானம் இலையின் மேற்பரப்பில் படர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப் பட்டு மகசு{ல் குறைந்து விடும்.

ஒருங்கிணைந்த பூச்சிக் மேலாண்மை முறைகள்: உழவியல் முறைகளில் பூச்சி மேலாண்மைகோடை உழவு செய்தல்: கோடை உழவு செய்வதினால் கோடை மழையின் பயன் மண்ணிற்குக் கிடைப்பதோடு களைகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப் படுகிறது. மேலும்; மண்;ணிற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் நுhற்புழுக்கள் வெளிக் கொணரப்பட்டு அவை சூரிய வெப்பத்தினாலும், பறவைகளால் கொத்தித் தின்றும் அழிக்கப்படுகின்றன.வயல் ஒரங்களில் இரகப் பருத்தி விதைகளை விதைத்தல்:பிடி பருத்தியானது காய்ப்புழுக்களுக்கு எதிர்ப்புத்தன்மை உடையவை. ஆனால் சரியான முறையில் பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள வில்லையெனில் காயப்புழுக்கள் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே பிடி பருத்தியின் விதையுடன் இணைத்து கொடுக்கப்படும் இரகப் பருத்தி விதைகளை வயல் ஒரங்களில் கண்டிப்பாக விதைக்க வேண்டும்.

பயிர்சுழற்சி:
உழவியல் முறைகளில் ஒன்றhன பயிர் சுழற்சி மண்ணின் வளத்தைக் காப்பதோடு பூச்சிகளின் தோற்றம் மற்றும் பெருக்கத்தைப் பெரு மளவில் தடுக்கின்றது. எனவே தொடர்ந்து பருத்தி பயிர் செய்வதையும், மறுதாம்பு பருத்திப் பயிர் செய்வதையும் தவிர்க்க வேண்டும். பருத்தியில் மக்காசோளம் அல்லது சோளத்தைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வதால் வெள்ளை ஈ, காய்ப்புழு, மண் வழிப் பரவும் பூச்சிகள் மற்றும் நூற்புழுக்கள் மட்டுப் படுத்தப்படுகின்றன.
சாம்பல் வண்டு தாக்குதலை குறைக்கவும், நூற்புழு பாதிப்பை தவிர்க்கவும் பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். குறிப்பாக கத்தரி பயிரிடப் பட்ட பின்பு பருத்தி பயிரிடுவதை தவிர்த்துவிட்டால், வேர்ப்புழு தாக்குதலைக் குறைக்கலாம்.
பொறிப்பயிர் அல்லது கவர்ச்சிப் பயிர்:
பருத்தி வயலில் கவர்ச்சிப் பயிராக ஆமணக்கு பயிரிடும் போது, புரொடீனியா அந்துப்பூச்சிகள் கவரப்பட்டு முட் டைகளை இடுகின்றன. இவற்றை எளிதில் அடையாளம் கண்டு அழித்து விடலாம்.
குணாதிசிய முறைகளில் பூச்சி மேலாண்மை
விளக்குப் பொறி:
விளக்குப் பொறியானது பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றின் தாக்குதலை முன்னறிவதற்கும், அவற்றின் பெருக்கம் அதிகரிப்பதை தெரிந்துகொள்வதற்கும், அதற்கேற்ப அவற்றை கட்டுப்படுத்து வதற்குறிய தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப் பதற்கும் உதவுகின்றன.
மஞ்சள் ஒட்டும் பொறி:
மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிhPஸ் தடவி ஏக்கருக்கு 10 என்ற விகிதத் தில் வைத்து வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியின் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
உயிரியல் முறை பூச்சி மேலாண்மை:
மாவுப்பூச்சிகளை உயிரியல் முறை யில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை கிராமத் திற்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிடவேண்டும். ஒட்டுண்ணி களின் எண்ணிக்கையைப் பெருக்கவும், மாவுப்பூச்சியின் தாக்குதல் தீவிரமா காமல் தடுக்கவும்; இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட வேண்டும். கிரிப்டோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப் பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரைவிழுங்கியை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது