×

2 போக்குவரத்து புறக்காவல் நிலையம் திறப்பு

அரியலூர், ஜன. 21: அரியலூர் மாவட்டத்தில் புறநகரின் முக்கிய சாலைகளாக நான்கு வழிப்பாதைகள் சந்திக்கும் இடங்கள் உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் பந்தல் அமைத்து பணியாற்றி வந்தனர். இதையடுத்து கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியில் தனியார் சிமென்ட் ஆலை உதவியுடன் ரூ.2.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட போக்குவரத்து புறக்காவல் நிலையம், செந்துறை ரவுண்டானா பகுதியில் தனியார் சிமென்ட் ஆலை உதவியுடன் ரூ.6.5லட்சம் செலவில் அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. காவல் நிலையங்களை திறந்து வைத்து எஸ்பி சீனிவாசன் பேசுகையில், சிமென்ட் ஆலைகளின் உதவியால் புறக்காவல் நிலையங்கள் உடனடியாக அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் காவலர்கள் சிரமமின்றி பணியாற்ற இயலும். போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா, துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags : Opening ,Transport Outlet Station ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு