×

பெரணமல்லூர் பகுதியில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பெரணமல்லூர், ஜன.21: பெரணமல்லூர் பகுதியில் மின்உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. பெரணமல்லூர் அண்ணாசிலை அருகே நேற்று மாலை நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு உதவி செயற்பொறியாளர் எழிலரசி தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் காந்தி, ஆடலரசன் முன்னிலை வகித்தனர். உதவி மின் பொறியாளர் ரவீந்திரன் வரவேற்றார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் பொதுமக்கள் இயற்கை இடற்பாடுகள் இடி, மின்னல் மற்றும் மழை காலங்களில் சேதமடைந்த மின் கட்டமைப்பு அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பியினை தொடக்கூடாது. மின் கம்பங்களில் ஆடு, மாடுகளை கட்டுவது, ஈரத்துணியை காயபோடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தரமான மின் உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஈரமான கைகளில் மின் சுவிட்சுகள் தொடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். பின்னர், மின்சார இடர்பாடுகள் குறித்த புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1912ல் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மின் சேமிப்பு குறித்த நோட்டிஸ் வினியோகம் செய்யபட்டது. முன்னதாக பெரணமல்லூர் பகுதியில் மழையூர், மடம், கோட்டுப்பாக்கம் பகுதியில் பிரசாரம் நடத்தப்பட்டது.

Tags : Electrical Security Awareness Campaign ,Peranamallur ,
× RELATED ₹10 கோடி மதிப்பு வளர்ச்சி திட்ட பணிகளை...