×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா

காஞ்சிபுரம், ஜன.21: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை, கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. பொதுமக்களிளிடம் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா இன்று (நேற்று) முதல் வரும் 27ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது சாலைப் பாதுகாப்பு வார விழாவில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிரைவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்துதல் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து கலெக்டர் தலைமையில், 200க்கு மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் முக்கிய பகுதிகளான காந்திரோடு, தேரடி, ரங்கசாமி குளம் வழியாக மாவட்ட காவலர் விளையாட்டு மைதானம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ்,  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (காஞ்சிபுரம்) செந்தில்குமார், ஸ்ரீபெரும்புதூர் சுதாகர், வட்டார ஆய்வாளர்கள் கருப்பய்யா, செங்கோட்டுவேல், முகுந்தன், விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram District ,
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...