×

பள்ளி படிக்கட்டில் தவறி விழுந்த மாணவன் பலி


ஆவடி, ஜன.21: ஆவடி, பூம்பொழில் நகர், ரோஜா தெரு, ஐஸ்வர்யா கார்டன் சார்ந்தவர் துர்களு சன்னிபாய்னா. இவரது மகன் கவுரவ் நவீன் (14). ஆவடி டேங்க் பேக்டரியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 9வது படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிக்கூடத்தில் படிக்கட்டில் விளையாடியுள்ளார். அப்போது, அவனது கால் தவறி படிகட்டில் உருண்டு கீழே விழுந்துள்ளான். இதில், அவனுக்கு நெற்றிப்பொட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவனை ஆசிரியர்கள் மீட்டு ஆவடி டேங்க் பேக்டரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கவுரவ் நவீன் இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student kills school student ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...