×

கோவில்பட்டி அருகே நீர்நிலைகளில் அரியவகை பறவை கணக்கெடுப்பு பணி

கோவில்பட்டி, ஜன.21: கோவில்பட்டி அருகே கிராம நீர்நிலைகளில் அரியவகை பறவை இனங்கள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியின் இயற்கை கழகம் மற்றும் மணிமுத்தாறு அகத்திய மலைமக்கள் இயற்கை வளமையம் சார்பில் நீர்நிலைகளில் அரியவகை பறவை இனங்கள கணக்கெடுப்பு பணிகள் 4 நாட்கள் நடந்தது.  கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, குருமலை, மூப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சமீபத்தில் பெய்த தொடர்மழையால் இக்கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள நிரம்பியுள்ளன. இக்கிராம நீர்நிலைக்கு சென்ற கல்லூரி இயற்கை கழக மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், நீர்நிலைகளில் வாழ்ந்து வரும் கொக்கு, கொண்டை நீர் காகம், சிறிய நீர்காகம், ஜம்முகோழி, நத்தைகுதிரை நாரை, சங்குவலை நாரை, சாம்பல் நிற நாரை, புள்ளி மூக்கு நாரை, பெரியமீன் கொத்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்களை கணக்கெடுத்து பதிவு செய்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் மகேஷ்குமார், குமார், பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி செய்திருந்தனர்.

Tags : waterfront ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!