சாத்தான்குளம் அருகே சாலையோர செடிகளால் விபத்து அபாயம்

சாத்தான்குளம், ஜன.21: சாத்தான்குளம் அருகே  சாலையோர  செடிகளால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை விலக்கு, செட்டிக்குளம், நொச்சிக்குளம், இளமால்குளம் வழியாக பேய்க்குளம், நெல்லைக்கு ஏராளமான அரசு பஸ் உள்ளிட்ட இதர  வாகனங்கள்  சென்று திரும்புகின்றன. இதில் பன்னம்பாறை, அமுதுண்ணாக்குடி விலக்கில் இருந்து  சாலையோரத்தில் முட்செடி  மற்றும் காட்டு செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.    இதனால் சாலை வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. சிலர் இருசக்கர வாகனத்தில் வரும்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  சாலையோர செடிகளை அப்புறப்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : roadside plants ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம் அருகே சாலையோர செடிகள் அகற்றம்