×

என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா

சாத்தான்குளம், ஜன.21: சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. இதில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவர்கள் பங்கேற்று சமூக பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஈடுப்பட்டனர். முகாம் நிறைவு விழா பொத்தகாலன்விளையில் நடந்தது. விழாவில் பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் வெனிஸ்குமார் ஆரம்ப ஜெபம் நடத்தினார். கல்லூரிமுதல்வர் சசிகரன் தலைமை வகித்தார். பொத்தகாலன்விளை தொழிலதிபர் காமராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். முகாமில் நாட்டு நலப்பணி சுற்றறிக்கையை நாட்டு நலப்பணி அலுவலர் ஞானசெல்வன் வழங்கினார். இதில் சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.  தொடர்ந்து சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் லூர்துமணி, ஊராட்சித்தலைவர் திருக்கல்யாணி, நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ், 14வது ஒன்றியக்குழு உறுப்பினர் ஜேசுஅஜிட் பேசினர். இதில் முகாமில் பங்கேற்றவர்களுக்கு  தொழிலதிபர் காமராஜ் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜோசப் ததேயுஸ் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ஞானசெல்வன் நன்றி கூறினார்.

Tags : closing ceremony ,NSS Camp ,
× RELATED யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க...