×

இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை

ஊட்டி, ஜன. 21:இரண்டாம் சீசன் முடிந்து இரு மாதங்கள் ஆன நிலையில், ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை காட்டிலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக ஊட்டிக்கு வருவதை வாடிக்கையாக ெகாண்டுள்ளனர். குறிப்பாக, ஐரோப்பியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவு வருகின்றனர். சில சமயங்களில் இவர்கள் டிசம்பர் மாதம் வரையிலும் வருவது வழக்கம். பொதுவாக பெரிய குழுக்களாக வருவார்கள். மேலும், சிலர் தங்களது மூதாதையர்கள் இங்கு வாழ்ந்த நிலையில், அவர்களின் வாழ்ந்த இடங்கள் மற்றும் கல்லறைகளை காண வருவதும் வழக்கம். இவர்களை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழைத்துச் செல்ல வழிகாட்டிகள் உள்ளனர்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களை பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் அழைத்து செல்வார்கள்.  வழக்கம் போல், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு வந்திருந்தனர்.  இந்நிலையில், இரண்டாம் சீசன் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதனால், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த போதிலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று வரை குறையாமல் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளில் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். தாவரவியல் பூங்காவிற்கும் நாள் தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும், அவர்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றனர் என்பதையும் பதிவு செய்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையாமல் உள்ளதால், இவர்களை நம்பியுள்ள வழிகாட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு