×

பாலக்காடு நூரணியில் கால்பந்து மைதானத்தில் கேலரி சரிந்து 60 பேர் காயம்

பாலக்காடு, ஜன. 21:பாலக்காடு மாவட்ட கால்பந்து குழு சார்பில் சமீபத்தில் மரணமடைந்த கால்பந்து விளையாட்டு வீரர் தன்ராஜ் குடும்பத்தினருககு நிதியுதவி சேகரிக்க பாலக்காடு நூரணி கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடைபெறவிருந்தது. இதற்காக மைதானத்தில் கேலரி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் முன்பதிவு கட்டண டிக்கெட்டுகள் எடுத்து விளையாட்டை ஆர்வமுடன் பார்க்கவந்திருந்தனர். பாலக்காடு எம்.பி., வி.கே.ஸ்ரீகண்டன் தொடங்கி வைத்தார். சிறிது நேரத்தில் கூட்டம் அதிகமானதால், கேலரி  சரிந்து வீழ்ந்தது. இதில் 60 பேர் காயமடைந்தனர். இவர்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேலரி பாலக்காடு றூரணியில் சரிந்ததை தொடர்ந்து கால்பந்து போட்டி தடைப்பட்டது. தன்ராஜின் குடும்பத்திற்காக சேகரித்த நிதியுதவி மறுதேதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் என பாலக்காடு மாவட்ட கால்பந்து குழுத் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான ஷாபி பரம்பில் தெரிவித்துள்ளார்.

Tags : collapse ,football field ,Palakkad ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்