×

கைப்பந்து போட்டி பெங்களூர் அணி வெற்றி

பந்தலூர், ஜன.21 ; பந்தலூர் அருகே தேவர்சோலை மச்சிக்கொல்லி மட்டம் பகுதியில்   எம் ஒய் எஸ் கைப்பந்து விளையாடு குழு சார்பில் கைப்பந்து போட்டி நடந்தது.  இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.   கூடலூர் திமுக எம்எல்ஏ திராவிடமணி அணியினரை அறிமுகம் செய்து  கைப்பந்தாட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடலூர் நகர செயலாளர்  ராஜேந்திரன், கூடலூர் ஒன்றிய அவைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட பிரதநிதி  மஞ்சமூலா சுப்ரமணி, பேரூர் செயலாளர் மாதேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இறுதி சுற்று ஆட்டத்தில் தேவர்சோலை வட்டக்கொல்லி அணிக்காக பெங்களூர் அணியும், பாலம்வயல் அணிக்காக கேளிக்கட் பிலேயர்சும் மோதின.  வட்டக்கொல்லி அணிக்கு முதல் பரிசு ரூ.25,006,  பாலம் வயல் அணிக்கு 2வது பரிசு ரூ.15,000, மாக்கமூலா அணிக்கு 3ம் பரிசு ரூ. 10,000 வென்றது.


Tags : Volleyball team ,Bangalore ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை