×

கூடலூர், பந்தலூர் நீதி மன்றங்களில் நிரந்தர நீதிபதிகள் நியமிக்க கோரி வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதம்

கூடலூர், ஜன.21:நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் உள்ள சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதி மன்றங்களில் கடந்த பல மாத காலமாக நீதிபதிகள் பணியில் இல்லாத காரணத்தால் வழக்கு தொடர்பான விஷயங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் ஐந்தாயிரம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளது.  கைதிகளை ரிமாண்ட் செய்யவும், பெயிலில் எடுக்கவும் கூடலூர் பந்தலூர்  பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரான ஊட்டிக்கு 50 முதல் 100 கிலோ மீட்டர்  தூரம் மலைப்பாதைகளில்  பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.  நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, நேற்று  காலை முதல்  கூடலூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றம் முன்பாக  வக்கீல்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயனுல்பாபு முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்கள் சுரேஷ், கோசி பேபி, சாக்கோ, ஜெயா ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : hunger strike ,lawyers ,judges ,courts ,Cuddalore ,
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...