×

கொங்கு நேஷனல் பள்ளி ஆண்டுவிழா

ஈரோடு, ஜன.21: ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தாளாளர் செங்கோட்டுவேலன் வரவேற்றார். முதல்வர் கலையரசி ஆண்டறிக்கையினை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு, 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பேசினார். தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கு தலா 2 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பாலகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேவராஜா, இளங்கோ, கிருஷ்ணன், தங்கவேல், வெங்கடாசலம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில், மேல்நிலை வகுப்புகளின் பொறுப்பு ஆசிரியை மெர்சி பமிலா நன்றி கூறினார்.

Tags : Kongu National School Anniversary ,
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது