ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தல் பந்தநல்லூர் மரப்பட்டறையில் இயந்திரங்களை திருடிய 4 பேர் கைது

கும்பகோணம், ஜன. 21: பந்தநல்லூர் அருகே மரப்பட்டறையில் இயந்திரங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (44). இவர் அதே பகுதியில் மரம் இழைக்கும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்த பார்த்தபோது ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் கோகுலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பாப்பாக்குடி துண்டு தெருவை காசிநாதன் மகன் சேர்ந்த கலியபெருமாள் (எ) செந்தில்(27), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஆனஸ்ட்ராஜ் (24), பெரிய தெருவை சேர்ந்த செல்வம் மகன் ராஜாராமன் (29), சோழபுரம் புதுத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ்குமார்(35) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த திருடிய பொருட்களை பறிமுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மரம் இழைக்கும் பட்டறையின் மேற்கூரையிலிருந்து உள்ளே குதித்து மரம் இழைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை திருடியுள்ளனர். இவர்கள் 4 பேரும் மரம் இழைக்கும் பட்டறையின் அருகில் வசிப்பவர்கள். திருட்டு குறித்து புகார் வந்தவுடன் திருடிய இடம் மற்றும் வெளியேறிய பகுதிகளை பார்வையிட்டோம். அப்போது அதில் உள்ள ஒருவர் திருடி விட்டு வெளியில் வரும்போது காலில் கம்பி குத்தி ரத்தம் அதிகமாக வெளியேறி சுவர், தரைகளில் ஒட்டியிருந்தது. இதை வைத்து கடந்த 18ம் தேதி முதல் காலில் கட்டு போட்டுள்ளவர்களை பற்றி தகவல் சேகரித்துபோது இந்த 4 பேர் தான் என்று தெரியவந்தது.இதையடுதுது அவர்களை கைது செய்தோம் என்றார்.

Related Stories:

>