பட்டுக்கோட்டை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தஞ்சை, ஜன. 21: பட்டுக்கோட்டை அருகே குண்டர் சட்டத்தின்கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் சூரப்பள்ளம் கிராமம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் குமார் (38). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில் குமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து குமார். குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: