×

நாகை விவசாயிகள் வேதனை நாகை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி கோலாகலம்

நாகை, ஜன.21: நாகை புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடந்தது. நாகை காடம்பாடியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு செபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக தேர் புனிதம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் செபஸ்தியாளர் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Naga Farmers' Veda Nayanai St. Sebastian Temple ,
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது