×

நகராட்சிக்கு வரி செலுத்தாதோர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்

நாகை, ஜன.21: நாகை நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர்களின் விவர பட்டியல் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார். நாகை நகராட்சிக்கு கடந்த 2019 20ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நிலுவை மற்றும் நடப்பு தொகையினை செலுத்தி நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு உதவி செய்ய வேண்டும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை நகரின் வளர்ச்சிக்கு போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் உடனே செலுத்த வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் என்ற இணையதளம் வாயிலாக ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் கார்டு ஆகியவை மூலமாகவும் வரி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் வசதிக்காக சனிக்கிழமைகள் தோறும் நகராட்சி வரி வசூல் மையம் செயல்படும். எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தி ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை ஆகியவற்றை தவிர்த்து கொள்ளலாம். மேலும் உயர்த்தப்பட்ட வரி தொகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே செலுத்திய வரி தொகையை செலுத்தினால் போதும். குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ளோர்களின் விவரம் கணக்கிடப்பட்டு வருகிறது. நாகை நகராட்சிக்கு மிக அதிகளவில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி நிலுவை வைத்திருப்பவர்களின் விவர பட்டியல் பொது இடங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : taxpayers ,municipality ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை