×

நகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை

புதுச்சேரி,  ஜன. 21: மத்திய அரசின் தூய்மை திட்ட தரவரிசை பட்டியலில் முதலிடம்  யாருக்கு? என்பதை உறுதிசெய்ய 2 நகராட்சிகளையும் பார்வையிட மத்திய குழு  விரைவில் புதுச்சேரி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு  முழுவதும் உள்ள சுமார் 4,000க்கும் மேற்பட்ட நகரங்களை சுத்தத்தின்  அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் ஸ்வச் சர்வேக் ஷன்- 2020 எனும்  கணக்கெடுப்பு கடந்த 4ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான  கணக்கெடுப்பின்போது அந்தந்த நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை பணி,  திறந்தவெளி கழிப்பிடம் இல்லாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசை  நிர்ணயிக்கப்படுகிறது. இப்போட்டியில் புதுச்சேரி மற்றும் உழவர்கரை  நகராட்சிகள் கலந்து ெகாண்டுள்ளன.

இந்த தரவரிசையில் முதலிடம் பிடிக்கும்  வகையில் 2 நகராட்சிகளும் தங்களது பகுதிக்குட்பட்ட வார்டுகளில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் இடத்தை தூய்மையாக வைத்திருக்கும்  வகையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தரவரிசை தொடர்பான  ஆய்வுக்காக விரைவில் மத்திய குழு புதுச்சேரி வரவுள்ள நிலையில் பாழடைந்து  கிடந்த கழிப்பிடங்களை புதுப்பித்து பயன்பாட்டிற்கு நகராட்சிகள்  விட்டு
இருப்பதோடு, அவற்றின் தூய்மையையும் தங்களது பணியாளர்களை கொண்டு  அவ்வப்போது கண்காணித்து வருகிறது. மேலும் புதுச்சேரி வரும் மத்திய  குழுவிடம், தங்களது நகராட்சியில் தூய்மை பணிக்கான என்னென்ன திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான தகவலை  எடுத்துரைக்க உள்ளனர். இதுதொடர்பாக மக்களின் கருத்தையும் இணையதளம் வாயிலாக  அறிந்து வருகின்றன.

Tags : municipalities ,Central Committee ,
× RELATED 6 மாநகராட்சிகளில் உயிரி எரிவாயு கலன்...