×

வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று விசாரணை 28 நாட்கள் அனுமதி கேட்கும் பின்னணி என்ன?

நாகர்கோவில், ஜன.21 : எஸ்.எஸ்.ஐ. கொலையில் கைதானவர்களை 28 நாட்கள் போலீஸ் காவலில் கேட்டு மனு செய்தது ஏன்? என்பது பற்றி அரசு வக்கீல் ஞானசேகர் கூறுகையில், எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதாகி உள்ளவர்களிடம் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். கர்நாடகம், கேரளம், ஆந்திரா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும். இதற்கான பயண நேரத்தை பார்க்க வேண்டும். இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. 28 நாட்கள் ஏன் கேட்கிறோம் என்பதை தெளிவாக நீதிமன்றத்தில் கூறி உள்ளோம். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த ெகாலைக்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இவற்றையெல்லாம் எங்களது வாதத்தின் போது எடுத்துரைத்து உள்ளோம். உ.பா. சட்டத்தை பொறுத்தவரை 28 நாட்கள், அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Tags : investigation ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...