கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி, ஜன. 20:   கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அருவி போல் கொட்டும் அணை நீரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிப்பதற்கான ஏற்பாடுகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கொடிவேரி அணைக்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தனர். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக, அருவி போல் கொட்டும் கொடிவேரி அணைக்கு அதிகளவு வாகனங்கள் வந்ததால் கொடிவேரி பிரிவில் இருந்து அணை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அணையின் பாதுகாப்பு பணிகளுக்காக குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அணை பிரிவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 2 கி.மீ. தூரம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நடந்தே சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Tags : Kodiveri Dam ,
× RELATED கொடிவேரி அணையில் இரட்டை வரிவசூல்