×

குன்னூர் அருகே ேரஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

குன்னூர், ஜன.20: குன்னூர் அருகே காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து 300 கிலோ அரிசியை சேதப்படுத்தியது.குன்னூர் அருகே உள்ள துாதுாா்மட்டம் கிராமத்தில் கடந்த 21 நாட்களாக நான்கு காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்த நிலையில் கிரேக்மோர்  பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குகள் புகுந்து நான்கு காட்டுயானைகள் மளிகை கடையில் 2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை நாசம் செய்தது. மேலும் ரேஷன் கடையில் புகுந்து 300 கிலோ மதிப்பிலான அாிசி, சர்க்கரை, பருப்பு போன்ற மூட்டைகளை நாசம் செய்துள்ளது. எனவே காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags : ration shop ,Coonoor ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா