வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

காங்கயம், ஜன. 20:காங்கயத்தில் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி, போலீசார் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் செய்தனர்.இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு வகைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காங்கயம் போலீஸ் நிலையம் முன்பு துவங்கிய பேரணியை, காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன் (பொ) துவக்கி வைத்தார். காங்கயம் பஸ்நிலையம், சென்னிமலைரோடு, பழையகோட்டைரோடு, கோவைரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதியில் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, சாலை விபத்துகளிலிருந்து உயிர் காக்க ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர். தர்மம் தலை காக்கும் தலைகவசம் உயிர் காக்கும் என அறிவுறுத்தியும், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். இதில் காங்கயம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : motorists ,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு