கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை, ஜன.20: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கோவை செல்வபுரம் போலீசார் கடந்த மாதம் 18ம் தேதி செல்வபுரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் டவுன்ஹாலை சேர்ந்த ரோஷன் பரீத்(25), கே.கே.புதூர் அப்பாஸ்(24), சென்னையை சேர்ந்த அக்பர் ஆசிப்(24) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 5.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் செல்வபுரம் போலீசார் அதற்கான உத்தரவு நகலை சிறை நிர்வாகிகளிடம் அளித்தனர். இதனை தொடர்ந்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED செங்குன்றம் மற்றும் புழல்...