×

திருவில்லிபுத்தூர் அருகே குண்டும் குழியுமான கிராமச் சாலை

திருவில்லிபுத்தூர் ஜன. 20: திருவில்லிபுத்தூர் அருகே, குண்டும் குழியுமாக இருக்கும் கீழப்பொட்டல்பட்டி சாலையை சீரமைத்து கூடுதல் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே, பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் கீழப்பொட்டல்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு காலையில் 8 மற்றும் 9:30 மணி, மாலையில் 4 மற்றும் 5 மணி என 4 வேளை அரசு பஸ் இயக்கப்படுகிறது. மாலை 7:30 மணிக்கு தனியார் மினிபஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் இக்கிராம மாணவர்கள் சிறப்பு வகுப்பு முடிந்து மாலை 6 மணிக்கு, அங்கிருந்து இனாம்கரிசல்குளம் வழியாக பெருமாள்தேவன்பட்டிக்கு வரும் பஸ்சில் வந்து கீழ்ப்பொட்டல்பட்டி முகப்பில் இறங்கி குண்டும், குழியுமான சாலை வழியாக ஊருக்கு செல்கின்றனர். இந்த சாலையில் மின்விளக்கு வசதியும் இல்லை.

இக்கிராமத்தின் மேற்கே ஒன்றே கால் கி.மீ தொலைவில் இனாம்கரிசல்குளம்-பெருமாள்தேவன்பட்டி சாலையும், கிழக்கே ஒன்றரை கி.மீ தொலைவில் அத்திக்குளம்-நாச்சியார்பட்டி சாலையும் செல்கின்றன.எனவே, மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலன்கருதி துலுக்கன்குளம் கண்மாய் கிழக்குப்புறம் தொடங்கி, அத்திக்குளம்-நாச்சியார்பட்டி, நாகபாளையம் சாலையில் இணையும் தூரம் வரை சாலையை சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்து மாலை 6:30 மணிக்கு கீழப்பொட்டல்பட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,village ,Tiruvilliputtur ,pit ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...