சென்னிமலை அருகே காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் 738 ம் ஆண்டு துவக்க விழா

பெருந்துறை, ஜன. 20:  சென்னிமலை அருகே காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் 738ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் 738ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு வெள்ளோட்டில் உள்ள காளிங்கராயன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொது நல அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த வாய்க்காலை கோண வாய்க்கால், பழைய வாய்க்கால், காரை வாய்க்கால் என மக்கள் அழைக்கின்றனர். இந்த வாய்க்கால் இன்றும் சிதிலமடையாமல் இருப்பதே அன்றைய தரமான கட்டுமானத்துக்கு சாட்சி. இன்றோடு இந்த பாசனம் பெற்று 737 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதை நினைவு கூரும் விதமாக வெள்ளோட்டில் உள்ள காளிங்கராயன் சிலைக்கு நேற்று காலை தென்முகம் வெள்ளோடு சாந்தந்தை குல மக்கள் மாலை அணிவித்தனர். தலைவர் அருணாசலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், முன்னாள் அறக்கட்டளை தலைவர் கண்ணுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் அ.தி.மு.க சார்பில் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் ஏ.கே.பழனிச்சாமி, சென்னிமலை ஒன்றியசெயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க மாவட்ட பொருளாளர் பி.கே. பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, சென்னிமலை ஒன்றிய சேர்மன் காயத்ரி, குமாரவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, வடமுகம் வெள்ளோடு ஊராட்சி தலைவர் ஜானகி மற்றும் கவுன்சிலர்கள் செல்வராஜ், பேபி முருகேசன், பழனிச்சாமி, தி.மு.க ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலு, மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ், பிரபாகரன், சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பவானி:   ஈரோடு மாவட்டம், பவானியில் காலிங்கராயன் அணைக்கட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளான நேற்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அணைக்கட்டில் உள்ள காலிங்கராயன் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினர். மேலும், பொங்கல் வைத்து, முளைப்பாரிகளை வாய்க்காலில் விட்டு வழிபாடு செய்தனர்.

Related Stories:

>