×

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு ெபாங்கல் முடிந்து ஊர் திரும்ப முடியாமல் பயணிகள் அவதி

கோவை, ஜன.20:  பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கு வந்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பலர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கும் வந்தனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால், கோவைக்கு வந்தவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். குறிப்பாக, கோவையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்ல 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. இதில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களில் ஒரு நபருக்கு ரூ.1,550 முதல் ரூ.2,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. ஏசி பஸ்களில் சீட் ரூ.1,300 முதல் ரூ.1500 வரையும், ஏசி இல்லாத சீட் ரூ.999 முதல் ரூ.1,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. மேலும், கோவையில் இருந்து பெங்களூருக்கு ரூ.1,100 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூடுதல் கட்டணம் காரணமாக ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். பலர் ரயில்களில் முன்பதிவு இல்லாத சீட்களில் பயணம் செய்தனர். பெரும்பாலனவர்கள் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  மேலும், நாளை முதல் சென்னைக்கு ஏசி பஸ்களில் படுக்கை வசதியுடன் ரூ.900 முதல் ரூ.1,500க்கு டிக்கெட் ஆன்லைன்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. கட்டணம் குறைவு என்பதால் பலர் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகின்றனர்.

Tags : Passengers ,city ,Omni ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...