×

முதல் போகம் அறுவடை நிறைவு குச்சனூர் சுரபி நதிக்கு தண்ணீர் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

சின்னமனூர், ஜன.20:  சின்னமனூர் பகுதியில் முதல்போகம் நெல் அறுவடை நிறைவடைந்ததால் குச்சனூர் சனீஸ்வரபவான் கோயில் சுரபி நதிக்கு தண்ணீர் திறந்து விட்டப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சின்னமனூர் பகுதிகளில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் ஒன்றரை மாதம் தாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 4 ஆயிரம் ஏக்கரில் தாமதமாக நெல் நடவினை துவக்கி ள் 120 நாட்களில் அறுவடையை விவசாயிகள் நிறைவு செய்துள்ளனர். முதல் போகம் நெல் நடவு செய்ய துவங்கியதிலிருந்து குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலுள்ள சுரபி நதிக்கு விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது.

உள்ளுர் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தோஷபரிகாரம் மற்றும் பூஜை செய்யவும், பாவங்கள் தொலைத்து புண்ணியத்தை தேடுவதற்கு துணிகளை சுரபி நதியில் விட்டு நீராடுவது வழக்கம்.
ஆனால் கடந்த 4 மாதங்களாக நதியில் அழுக்கு தண்ணீரும், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகள் நிறைந்து அசுத்தமாக கிடந்தது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

தற்போது முதல் போகம் நிறைவடைந்ததால் சுருளி அருவியுடன் முல்லைப் பெரியாறும் சேர்ந்து வருகிற தண்ணீர்  நேற்று முன்தினம் திறந்து விடப்பட்டது. இதனால் சுரபி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சிடைந்தனர். நான்கு மாதம் கழித்து நேற்று பக்தர்கள் சுரபி நதியில் நீராடினர்.  அப்போது அவர்கள் கூறுகையில்,`` பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் புண்ணிய நதியான சுரபி நதியினை மாசு படாமல் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Devotees ,opening ,Kuchanur Surabhi River ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி