வள்ளுவர் பேரவை கருத்தரங்கு

காரைக்குடி, ஜன.20: காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் வள்ளுவர் பேரவை சார்பில் வாழ்வியல் நெறியுரைக்கும் வள்ளுவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வள்ளுவர் பேரவை நிறுவனத் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சேதுபாஸ்கரா கல்விக்குழும தலைவர் சேதுகுமணன், சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டன் ஆகியோர் கட்டுரையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.

வாழ்வியல் நெறியுரைக்கும் வள்ளுவம் என்ற தலைப்பில் 57 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. ரோட்டரி ஹெரிடேஜ் சங்க முன்னாள் தலைவர் நாச்சியப்பன், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர்கள் ராகுலதாசன், ஆறுமுகம், கணிதத்துறை தலைவர் முனைவர் கணிதக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories:

>