×

மாவட்டம் முழுவதும் போலியோ தடுப்பு முகாம்

கம்பம், ஜன.20: போலியோவைக் கட்டுப்படுத்தும் வகையிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் விதத்திலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் நடைபெறும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், நாடுமுழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கம்பம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் நேற்று 25 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது. கம்பம் புது பஸ்டாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கமலா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் அரசக்குமார், மேலாளர் முனிராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், திருப்பதி, சரவணன் மற்றும் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். கம்பத்தில் உள்ள இருபத்தி ஐந்து மையங்கள் மற்றும் நடமாடம் வாகனம் மூலம் 5 வயதிற்குட்பட்ட 6480 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டி என்ற நாகையகவுண்டன்பட்டியில், நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெருமளவில் பங்கேற்றனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 5வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் நிகழ்வுகள் நடந்தன. அணைப்பட்டி என்ற நாகையகவுண்டன்பட்டி கிராமத்தில் உத்தமபாளையம் ஒன்றியகுழு சேர்மன் ஜான்சி வாஞ்சிநாதன் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ராயப்பன்பட்டி கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ராமசாமிநாயக்கன்பட்டி துணை சுகாதாரநிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை ஊற்றினார்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...