×

இடிந்து விழுந்த காலனி வீடுகள்; அடிப்படை வசதியும் இல்லை பூசேரி கிராம மக்கள் புகார்

சாயல்குடி, ஜன.20: முதுகுளத்தூர் அருகே பூசேரி காலனியில் கடந்த 30 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூசேரி ஊராட்சி பூசேரி காலனியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இது குறித்து காலனி மக்கள் கூறும்போது, பூசேரி காலனியில் 80 குடும்பங்கள் உள்ளன. கட்டிட கூலி தொழில், சுமைதூக்கும் தொழில், துப்புறவு பணி மற்றும் நூறுநாள் வேலை மட்டுமே தொழிலாக செய்து வருகிறோம். இந்த காலனிகளில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், கழிவறைகள், சாலை வசதிகள் கிடையாது. மத்திய,மாநில அரசுகள் இலவசமாக வழங்க கூடிய சென்ட்ரிங் வீடுகள் கூட கிடையாது.

இந்த காலனி தெருவிற்கு கடந்த 1990ம் ஆண்டில் 40 காலனி வீடுகள் அரசு சார்பில் கட்டி தரப்பட்டது. 30 வருடங்கள் ஆன நிலையில், போதிய மராமத்து இல்லாததால், வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து வருகிறது. இதில் 5 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டது. மீதமுள்ள வீடுகளும் இடிந்து வருவதால் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் தூங்குவதற்கு அஞ்சி, வெளியில் வீடு முற்றங்களில் குழந்தைகளுடன் படுத்து தூங்குகிறோம். விஷஜந்துகள் தீண்டிவிடும் அச்சத்துடன், கொசுக்கடி, பனி பொழிவால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். சில வீடுகளில் தற்காலிக பனை ஓலை கிடுகு, ஓடு வேய்ந்து குடியிருந்து வருகிறோம்.

இங்கு முறையாக குடிதண்ணீர் வருவதில்லை, தெருக்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கவில்லை. இதனால் கண்மாய் தண்ணீரை பிடித்து தள்ளுவண்டியில் வைத்து தள்ளி வரும் நிலை உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கிடையாது. தனிநபர் கழிப்பறை வசதியும் கிடையாது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால் பெண்கள், மாணவிகள் வெளிேய செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவலநிலை உள்ளது.

Tags : colony houses ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...