×

திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதி மீறியதாக 14 ஆயிரம் வழக்குகள் பதிவு 25.90 லட்சம் அபராதம் வசூல்

திருவண்ணாமலை, ஜன.20: திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 14 ஆயிரம் வழக்குகள் பதிந்து, ₹25.90 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிய, போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடந்த சோதனையில், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஹெல்மட் அணியாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, அதிக வேகம், ஒரே பைக்கில் 3 பேர் சென்றது, நோ என்ட்ரியில் வந்தது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்சென்றது, லைசென்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 14 ஆயிரத்து 988 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அபராத தொகையாக ₹25 லட்சத்து 90 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தெரிவித்தார்.

Tags : Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...