புளியங்குடி பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சன பூஜை

புளியங்குடி, ஜன. 20:  புளியங்குடி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் தை மாத சுவாதி  நட்சத்திரத்தையொட்டி  சிறப்பு திருமஞ்சன பூஜை நடந்தது. புளியங்குடி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தை மாதத்திற்கான சிறப்பு திருமஞ்சன பூஜை நேற்று முன்தினம் மாலை விமரிசையாக நடந்தது. மாலை 4 மணிக்கு மங்கள இசையும், அதைத்தொடர்ந்து கும்ப பூஜை, ஹோமம், 5:30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, உற்சவர் உள்வீதியுலா நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், திருமஞ்சன பூஜை கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories:

>