×

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில்‘அண்ணாவின் தமிழியம்’குறுகிய கால படிப்பு அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழக ‘அண்ணா இருக்கை’ சார்பாக, அறிஞர் அண்ணாவின் 113ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று அண்ணாவின் ஆளுமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது துணைவேந்தர் கூறும்போது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்’குறுகிய கால படிப்பு அறிமுகம் செய்யப்படும். இப்படிப்பின் மூலம் குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு அண்ணாவின் தமிழியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்….

The post தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில்‘அண்ணாவின் தமிழியம்’குறுகிய கால படிப்பு அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Open University ,Chennai ,Vice ,Parthasarathy ,Tamil Nadu Open University 'Anna Seat ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. டிரோன்...