×

அரக்கோணத்தில் பேரிடர் மேலாண்மை மீட்புபடை 5ம் கட்ட பயிற்சி முகாம் திருவாரூர் இளைஞர்கள் 60 பேர் பங்கேற்பு

திருவாரூர், ஜன. 20: இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திராவின் சார்பில் 300 இளைஞர்கள் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி படை மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் நான்கு கட்ட பயிற்சிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.இந்நிலையில் 5ம் கட்ட பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி படை மையத்தில் நடக்கிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் 60 இளைஞர்களை கொண்ட குழுவை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பயிற்சிக்கு செல்லும் இளைஞர்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகி அண்ணாதுரை, திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் கல்லூரி கண்ணன், திருவிக அரசு கலை கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக நேருயுவ கேந்திரா அமைப்பின் கணக்காளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : training camp ,Thiruvarur ,Disaster Management Recovery ,Arakonam ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...