×

சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்ட அளவில் 3 நாட்கள் தேர்வு போட்டி

தஞ்சை, ஜன.20: சர்வதேச திறன் போட்டியில் கலந்து கொள்ள தஞ்சையில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேசத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தொடக்க நிலையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான முதன்மைத் தேர்வு 6 துறைகளில் உள்ள 47 தொழில் பிரிவுகளுக்கு வரும் 20,21,22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அத்தேர்வில் தேர்வு பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட அளவில் திறன் போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு போட்டி நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்து அஞ்சல் வழியாக தபால் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ராஜேந்திரன், உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், தஞ்சை என்ற முகவரியிலோ அல்லது 04362-278222 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Tags : district ,Tanjore ,selection competition ,International Skills Competition ,
× RELATED தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்...