×

விண்ணமங்கலத்தில் சைக்கிள்தின விழிப்புணர்வு பேரணி

திருக்காட்டுப்பள்ளி, ஜன.20: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் “ஆரோக்கிய இந்தியா - மிதிவண்டி தினம் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் (18ம் தேதி) நடந்தது. டீசல், பெட்ரோல் வாகனங்களால் வெளியாகும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும் மக்களுக்கு போதுமான உடல் உழைப்பு இல்லாமல் நோய்கள் வருகின்றன. இதனை வலியுறுத்தி மிதிவண்டி (சைக்கிள்) தினமான நேற்று முன்தினம் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த சைக்கிள் பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மொழிப்போர் தியாகி நடராசன், மதியழகன், முருகேசன் முன்னிலை வகித்தனர். விண்ணமங்கலம் பெருமாள் கோயிலில் பேரணி துவங்கி திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் வரை நடந்தது. இதில் 3 பெண்கள் உட்பட 48 பேர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த செண்டாங்காடு கிராமத்தில் நடைபெற்ற சைக்கிள் பேரணிக்கு செண்டாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி செண்டாங்காடு சாலையில் தொடங்கி அனைத்து வீதிகளுக்கும் சென்றது. பேரணியில் ஊராட்சி சார்பில் குமரசந்திரன், சரவணபவ, வீரமுத்து, சுப்பையன் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bicycle awareness rally ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை...