×

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

ஜெயங்கொண்டம்,ஜன.20: ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சி உட்பட ஆரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட 235 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டன. கடந்த வருடம் 11 ஆயிரத்து 761 குழந்தைகளுக்கு ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் சொட்டு மருந்து அளிக்கப்பட்டன.

 இந்த வருடத்தில் 11 ஆயிரத்து 814 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தில் டாக்டர் லட்சுமிதரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முகாமை குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அறச்செல்வி முகாமை துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 235 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடுபவர்கள் 540 பேரும் இதில் அங்கன்வாடி பணியாளர்கள் 175 பேரும் மற்றும் மூன்று வாகனத்தில் நடமாடும் போலியோ சொட்டு மருந்து போடுபவர்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் , மருத்துவர்கள் உள்ளிட்ட 54 பேரும் போலியோ சொட்டு மருந்து போடும் முகாமில் ஈடுபட்டு .பணியாற்றினார். 235 மையங்களிலும் சுமார் 10 ஆயிரத்து 800 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. இதுபோல் ஆண்டிமடம் வட்டாரத்தில் 77 மையங்களில் 10 ஆயிரத்து 707 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது முகாமில்ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மதி கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துவக்கி வைத்தார்.

Tags : children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்