×

புதர்கள் மண்டி, சிதிலமடைந்து கிடக்கும் டென்னிஸ் மைதானம்


பெரம்பலூர்,ஜன.20:சுற்றிலும் புதர்கள் மண்டி, சிந்தட்டிக் தரை தளம் வெடித்து, முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும்டென்னிஸ் மைதானம் சீரமைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே மிக பிரம்மாண்ட மான,மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள் ளது. இதில் தடகள போட்டிகளுக்கான மைதானம், அதற்குள்ளே கால்பந்து, ஹாக்கி விளையாடும் வசதி, பிரத்யேகமாக பேஸ் கட்பால் மைதானம், வலை க்கம்பி சுற்றுச்சுவர் பாது காப்பு கொண்ட வாலிபால் மைதானம், 50 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், ஆண்களுக்கான நவீன உடற்பயிற்சிக்கூடம் இவை களோடு இறகுப்பந்து உள் விளையாட்டு மைதானம், அதன் அருகிலேயே பிரம் மாண்டமான பல்நோக்கு உள் விளையாட்டு மைதா னம், இவைகளோடு சிந்த டிக் தரைதளம் கொண்ட டென்னிஸ் மைதானம் என மாநகரங்களான சென்னை மதுரை, கோவை, சேலம் உள்ளிட்டப் பெருநகரங்க ளைக் கொண்ட மாவட்டங் களுக்கு இணையாக மாவ ட்ட விளையாட்டுமைதானம் அமைந்திருப்பது பெரம்ப லூர் மாவட்டத்தில் மட்டுமே.

இவற்றோடு தலைநகர் சென்னைக்கு அடுத்தபடி யாக அரசு சார்பில் நவீன ரோலர் ஸ்கேட்டிங் மைதா னம் அமைக்கப்பட்டுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் தான்.விளையாட்டுத் துறை யில் இந்த இமாலய வளர்ச்சிகள் எல்லாம் கடந்த 3 ஆ ண்டுகளுக்கு முன்பு நடந்து வந்த சாதனைகள் ஆகும். . கடந்த 2 வருடங்களாக ரூ1.15 கோடி மதிப்பில் கேலரிகள் வலைப்பயிற்சி வசதிகளு டன் திட்டமிட்டு தொடங்கப் பட்ட கிரிக்கெட் மைதானம் தற்போது 10அடி உயர கரு வேல மரங்கள் அடர்ந்த காடாக மாறிக் கிடக்கிறது. ஒதுக்கப்பட்ட ஒரு கோடிக் கும் மேலான நிதி என்ன வானது என்றே தெரியவில் லை.

இந்நிலையில் நான் காண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தி ற்கு வரப்பிரசாதமாக சிந்தடிக் தரை தளத்துடன் கிடை த்த டென்னிஸ் விளையா ட்டு மைதானம் பயன்பாடி ன்றி, பராமரிப்பின்றி வெடி த்துப் பிளந்து, சுற்றிலும் புதர்கள் மண்டி, பாதுகாப்பு கம்பி வேலிகளிலும் கொடி கள் பற்றிப் படர்ந்து டென் னிஸ் மைதானம் உருக்கு லைந்து காணப்படுகிறது. மாவட்ட விளையாட்டு மைதானத்தைச் சுற்றி உட்புறம் அமைக்கப்பட்ட நடைபாதைகள்,செடி கொடி களுடன் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. ஆயிரக்கணக் கான பள்ளி மாணவ மாண வியர், அரசு ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், நடைப்பயிற்சியாளர்கள் என நாள்தோறும் பயன்பா ட்டில் இருக்கும் பெரம்ப லூர் மாவட்ட விளையாட்டு மைதானம் ஏனோ முறை யான கழிப்பிட வசதிகூட இல்லாமல்,கட்டப்பட்ட கழிப் பறைகள் பராமரிக்கப்படா மல், துர்நாற்றம் வீசும் அவ ல நிலையில் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெரம்பலூர் வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெரம்பலூர் மாவட்டத்திற்கென பேர் சொல்லும்படி எதையுமே செய்யாமல் ஏமாற்றிய நிலையில் வெற்று அறிவி ப்பாக வெளேளாற்றுப் பாலம் ரூ14கோடியில் கட்ட ப்படுமென்றும், கண்து டைப்புக்காக இந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தி ற்கு மட்டும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் விளை யாட்டு மைதானம் என பெயர்சூட்டி விட்டுச் சென்றார். அப்படி முதலமைச்ச ரே குறிப்பிட்டு பெயர் சூட் டிய விளையாட்டு மைதா னமோ புதர்கள் மண்டி பரா மரிப்பின்றி காணப்படுவது விளையாட்டு வீரர்கள் மத் தியில் பெரும் அச்சத்தை யும் அதிருப்தியையும் ஏற் படுத்தியுள்ளது.

மாவட்டத் தலைநகராக விளங்கும் பெரம்பலூர் நகராட்சி பகு திகளைச் சேர்ந்த இளைஞ ர்கள், பள்ளிக் கல்லூரி மா ணவர்கள் கிரிக்கெட் வி ளையாட மைதானம் இல் லாமல் அரசு விடுமுறை நாட்களில்கூட அரசு மேல் நிலைப்பள்ளியில் அங்கு அரசு பொதுத் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக சத்தம் போட்டு கிரிக்கெட் விளையாடும் சூழ்நிலையில், நகருக்கு வெளியே நவீன முறையில் 1.15 கோடியில் கட்டப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு மைதானம் தொடங்கப்பட்ட சில மாதங்களில் முடங்கிப் போனதால், கருவேலமரக் காடாக மாறிய போதும், அசராமல்அதன் நடுவேயும் ஆடுகளம் அமைத்து உள்ளூர் இளைஞர்கள் விஷ ஜந்துக்களுக்கிடையே விளையாடி வருகின்றனர்.
ஓராண்டுக்கு மேலாக ஒரு பணியும் நடக்காமல் முடங் கிக் கிடக்கும் மாவட்ட வி ளையாட்டு மைதானம் முந் தைய ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை மீண்டும் அடைய, விளையாட்டு அலு வலர்கள் தங்கள் கடமை யை உணர்ந்து விளையா ட்டு மைதானத்தை பராமரித்திட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துமா என விளையாட்டு வீரர்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழு ப்பியுள்ளனர்.

Tags : tennis court ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது