×

மாவட்டம் வயிற்றுக்காக கயிற்றில் ஆடும் சிறுமி பருவமழை கைவிட்ட நத்தம் பகுதி கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை

நத்தம், ஜன. 20: நத்தம் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த மாதங்களில் பெய்த வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் போதிய கனமழை பெய்யவில்லை. அவ்வப்போது பெய்த சாரல் மழையால் பூமியின் ஈரப்பதம் ஏற்பட்டு ஆங்காங்கே பசும்புல் மற்றும் தாவர வகைகள் செழிப்புடன் பசுமையாக காணப்பட்டது. ஆனால் சிற்றோடைகள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கான நீர்வரத்தின்றிபோனது. இதனால் கண்மாய்கள் நீரின்றி காணப்படுகிறது.

தற்சமயம் திடீரென வெப்பசலனம், புயல் மழை என வானிலை ஆய்வு மையம் மழை பற்றிய எச்சரிக்கை செய்தபோதும். இப்பகுதியில் சாரல் மழையாகவே பெய்துவிட்டு சென்றது. இதனால் நெற்பயிர்களில் குறுவை சாகுபடி என்பது குறைந்து போய் இறவை சாகுபடியே செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான நன்செய் நிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யாமல் தரிசாகவே விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.மேலும் இப்பகுதியில் உள்ள மாமரங்களுக்க மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்தந்த பகுதிகளில் கண்மாய் மற்றும் குழாய்களில் தண்ணீர் அதிகம் இல்லாததால் டிராக்டர்களில் பிளாஸ்டிக் டிரம்களை ஏற்றி அவற்றில் தண்ணீரை விலைக்கு வாங்கிச் நிரப்பிச் சென்று மாமரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் கூட நத்தம் பகுதியில் மேகமூட்டங்கள் காலையிலிருந்து காணப்பட்ட போதிலும் அவைகள் சிறு தூறல்களாக சாரல் மழையாகவே பெய்தது. எனவே இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்மாய்கள் நிரம்பும் அளவிற்கு கனமழை தேவை என்ற நிலையில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்