×

இன்று ஜனவரி 20 ஜான் ரஸ்கின் நினைவுநாள் கொடைக்கானலில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கொடைக்கானல், ஜன. 20:  கொடைக்கானலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் சன்அரிமா சங்க பட்டய தலைவர் டி.பி.ரவீந்திரன், ரோட்டரி சங்க செயலாளர் சன்னி ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி பகுதி முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு நகராட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தது. சுற்றுலா இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பெரியூர் பகுதியில் சொட்டு மருந்து முகாமினை கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். கீழ்மலை மற்றும் மேல் மலைப்பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடந்தது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரியூர் ஊராட்சி பள்ளியில் நடந்த சொட்டு மருந்து முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்தினை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி கொடுத்தார்.கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆணையாளர் நாராயணன் போலியோ சொட்டு மருந்தினை கொடுத்தார்.ஒட்டன்சத்திரம்:  ஒட்டன்சத்திரத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து பேருந்து நிலையம் முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்|றது.

முகாமை ஒட்டன்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய துணைத்தலைவர் காயத்ரிதேவி, வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுபா, சுகாதார ஆய்வாளர் வீரபாகு உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பண்ணப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தைக்கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சிமன்ற துணை தலைவர், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kodaikanal ,John Ruskin Memorial Polio Drip Camp ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்