×

கோயில் அதிகாரிகள் குழப்பம் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், ஜன. 20:போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் இல்லாத எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் ஒரே நாளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நேற்று ஒரே தவணையாக வழங்கப்பட்டது. முகாமை கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் 1,313 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 0-5 வயதிற்குட்பட்ட 1,91,192 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து மையங்களிலும், 29 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் மற்றம் 50 போக்குவரத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,252 பணியாளர்கள் மற்றும் தன்னார்வ சங்கத்தினர் ஈடுபட்டனர். பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும், இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பணியில் அனைத்து பெற்றோர்களும் பங்காற்றிட வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) பூங்கோதை, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்;) நளினி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், நகர்நல அலுவலர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழநி: பழநி சுகாதார மாவட்டத்தில் 83 ஆயிரத்து 903  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.பழநி சுகாதார மாவட்டத்தில் பழநி, குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கொடைக்கானல் ஆகிய 7 வட்டாரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் நேற்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு துவங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. பழநி அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் உமா மற்றும் பழநி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெயந்தி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

பழநி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் நாராயணன் கலந்து கொண்டு சொட்டு மருந்து நிகழ்வை துவக்கி வைத்தார். ஊராட்சி பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் போலியோ முகாமினை துவக்கி வைத்தனர். நேற்று பழநி சுகாதார மாவட்டத்தில் 627 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. 25 நடமாடும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.பக்தர்களின் வசதிக்காக பழநியில் பஸ் நிலையம், ரயில் நிலையம், வின்ச் நிலையம், ரோப்கார் நிலையங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இம்மையங்களின் மூலம் நேற்று பழநி சுகாதார மாவட்டத்தில் சுமார் 83 ஆயிரத்து 903 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. 

Tags : Temple ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு